Puthumai Website -புதுமை வலைத்தளம்  

பாராட்டு விழாவில்ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேச்சு

Picture
சினிமா தொழிலாளர்களுக்காக தமிழக அரசு கட்டிக்கொடுக்கும் வீட்டுக்காக, வசதி உள்ளவர்கள் கை நீட்ட வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.முதலமைச்சர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது: இது, ஒரு மகத்தான விழா. சாதாரண விழா அல்ல.இதில் கலந்துகொண்டதற்கு வாய்ப்பளித்ததற்காக, நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இந்த நன்றியை எப்படி சொல்வது என்று தெரியவில்ல. மூன்று மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் நடைபெற்ற விழாவில், சினிமா தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வழங்குவதாக கலைஞர் அறிவித்தார்.
அறிவித்ததோடு நிற்காமல், நிலத்தை அனுமதிப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார்.

பெப்சி தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் அவர் வீட்டு மனை அளித்து இருக்கிறார்.இந்த நிலத்தில் எவ்வளவு சீக்கிரம் வீடுகளை கட்ட முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வீடு கட்டி, அதை நான் பார்க்கணும் என்று கலைஞர் சொன்னார்.


அதற்கு எப்படி நன்றி சொல்வது? வாழ்நாளில் அவரை மறக்கக்கூடாது.
இந்த நிலத்தில் கட்டப்படும் வீடுகள், கஷ்டப்படுகிற தொழிலாளர்களுக்கு போய்ச்சேர்ந்தால்தான் அவர் சந்தோஷப்படுவார்.

வசதியாக இருப்பவர்கள், கை நீட்டக்கூடாது.
உண்மையை பேசுவதில், சத்தியம் பேசுவதில், யாருக்கும் எவனுக்கும் நான் பயப்பட மாட்டேன். உண்மையை பேசும்போது,சிலர் மனம் புண்பட்டு இருந்தால், என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.


இல்லாதவர்களுக்கு கிடைத்தால்தான் கலைஞர் சந்தோஷப்படுவார்.
ஒருவர் மதுரைக்கு போவதற்காக, சட்டைப்பையில் ரூ.350 வைத்திருந்தார். டிக்கெட் 300 ரூபாய்.மீதமுள்ள 50 ரூபாயில் சாப்பிடலாம் என்று ஓட்டலுக்கு போனார்.


அங்கே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம். உங்கள் பேரன் வந்து காசு கொடுத்தால் போதும் என்று எழுதப்பட்டிருந்தது.
அதை நம்பி அந்த ஆள் 4 பிரியாணி, 2 சிக்கன், 10 புரோட்டா, கீமா, தலைக்கறி எல்லாம் சாப்பிட்டார்.

அவர் சாப்பிட்டு முடித்ததும், ஓட்டலில் பணம் கேட்டார்கள். ``பேரனிடம்தான் பணம் வாங்குவோம் என்று எழுதியிருக்கிறீர்களே'' என்று சாப்பிட்டவர் கேட்டார்.
உடனே ஓட்டல்காரர், ``உங்க தாத்தா சாப்பிட்டதுக்கு யார் பணம் கொடுப்பார்கள்? பணத்தை வை'' என்றார்.


எதற்கு இந்த கதையை சொல்கிறேன் என்றால், ஓசியில் சாப்பிடாதீங்க. ஓசியில் வீட்டுக்கு ஆசைப்படாதீங்க.
அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் வைர நெஞ்சம் உடையவர்களாக இருப்பார்கள் என்று நினைத்தேன்.எப்படி நீங்கள் (கலைஞர்) இவ்வளவு மெல்லிய இதயம் வைத்துக்கொண்டு அரசியலில் இருக்கிறீர்கள்?.இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Back To Home



இந்த செய்தியை படித்தவர்கள்