Puthumai Website -புதுமை வலைத்தளம்  

தலையும் தளபதியும் வேறு வேறு இல்லை

Picture
அஜித்துக்கு ஒரு பிரச்சினை என்றால் விஜயும் விஜய்க்கு பிரச்சினை என்றால் அஜித்தும் ஓடி வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர் அதற்கு உதாரணமாகத்தான் இப்போது நடக்கும் பிரச்சினையில் விஜய் அஜிதுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அஜீத் விவகாரத்தில் பெப்ஸி கடுமையான முடிவுகளை எடுத்தபோது அஜீத்துக்காக சினிமா உலகில் பரிந்து பேசிய ஒரே நட்சத்திரம் சூப்பர் ஸ்டார்தான்.ஆனால் அவருக்கும் பெப்ஸி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் கண்டனம் தெரிவித்துவிட, இன்னொரு நட்சத்திரம் யாரும் எதிர்பாராத வகையில் இதில் தலையிட்டுள்ளார்.

அவர் விஜய். தொழில் ரீதியாக அஜீத்துக்கு எதிரானவராக விஜய் சித்தரிக்கப்பட்டாலும் திரைக்கு வெளியே இருவரும் நட்பு பாராட்டிக் கொள்வது தொடர்கிறது.கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை இரு குடும்பத்தினரும் சேர்ந்தே கொண்டாடுகின்றனர்.

அந்த பாசத்தில், விசி குகநாதனைத் தொடர்பு கொண்ட விஜய், "அஜீத் ஒரு திறந்த புத்தகம் மாதிரி. அவர் மனதில் ஒன்றுமில்லை. நினைப்பதை உடனே கொட்டிவிடுவார். அதைப் பெரிதுபடுத்தி அவருக்கு மன உளைச்சல் தர வேண்டாம்..." என்று கேட்டுக் கொண்டாராம். மேலும் கடந்த புத்தாண்டு பார்ட்டியின்போது, நடிப்பை சில ஆண்டுகளில் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என அஜீத் சொன்னாராம் விஜய்யிடம்.

அதனைக் குறிப்பிட்டுப் பேசிய விஜய், அவர் பீல்டில் இருக்கும் வரை கஷ்டப்படுத்தாமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால் இதில் கடும் கோபமடைந்த குகநாதன், அவரை யார் நடிக்கச் சொன்னது.. விருப்பமில்லாவிட்டால் போகட்டும் என்ற ரேஞ்சுக்குப் பேசிவிட்டதாக கோலிவுட்டில் பரபரக்கிறார்கள்

விஜய் போசியும் கேட்காத அவர் மீது விஜய்  ரசிகர்களும் கோவப்பட்டுள்ளனர் அஜித் ரசிகர்களுடன் விஜய்  ரசிகர்களும் இணைந்துள்ளனர் இனி சர வெடிதான்