Puthumai Website -புதுமை வலைத்தளம்  

குட்டி

Picture
மனசுல 'குட்டி'யூண்டு இடம் கூட தேவையில்லை. என் ஒன் சைட் லவ்வை ஃபீல் பண்ணா போதும்! இப்படி தான் விரும்பும் பெண்ணிடம் தீர்மானமாக சொல்லும் காதலன்!அடித்து, துவைத்து, துடிக்க துடிக்க தொங்கப் போட்ட தமிழ்சினிமாவின் 'முக்கோண' காதலில் இது வேற ரகம்!

ஸ்ரேயாவுக்கும் சமீர் தத்தானிக்கும் லவ். கிட்டதட்ட வன்முறை மூலம் மடக்கிப் போட்ட இந்த லவ்வை, சமீர் முழுசாக ஃபீல் பண்ண விடாமல் குறுக்கே வருகிறார் அதே கல்லு£ரியில் படிக்கும் தனுஷ். நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுங்க பாஸ். நானும் ஓரமா நின்னு லவ் பண்ணிக்கிறேன் என்ற இவரது தத்துவம், சர்ர்ர்ரியான தத்துபித்துவம். தனது காதலிக்கு என்ன பிடிக்குதோ, அதை செய்து தருவது என் கடமை என்று அவளுக்கு பிடித்த காதலனை அவனோடு சேர்த்து வைக்க துடிக்கும் இந்த கீழ்பாக்க கேஸ், அடிக்கிற லு£ட்டிகள் அத்தனையும் ஜாலி பட்டாசு. காலி டம்ளரில் கல் வீசி, அது கரெக்டாக விழுந்தால் காதல் செட் ஆகும் என்ற புதிய ஜோதிடத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். இனி ஆங்காங்கே கல் பறக்கக்கூடும்.

"உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல, அப்புறம் என்னை கண்டு ஏன் பயப்படுறே?" என்று ஒரு கேள்வி கேட்டு ஆட்டத்தில் எப்பவும் இருக்கிற மாதிரி வழி ஏற்படுத்திக் கொள்கிறார் தனுஷ். அப்புறம் என்ன? காதலர்கள் சேர்ந்திருக்கும் போதும், பிரிந்திருக்கும் போது, லாஜிக்கோடு பிரசன்ட் ஆகிவிடுகிறார். ஜுரத்தில் கிடக்கும் ஸ்ரேயாவை பார்க்க சமீரோடு தொற்றிக் கொண்டு போகிற தனுஷ், கைவசம் எடுத்துப் போகிற ஆப்பிள் சமாச்சாரங்களை கொடுக்கிற போதும், ஸ்ரேயாவின் பர்த் டே வை ஏக பிரமாதமாக கொண்டாடுகிற போதும், 'இளசுகளை கவர இருபது டிப்ஸ்' என்று புத்தகமே போடுகிற அளவுக்கு பொளந்து கட்டுகிறார்! இவரை சுற்றி எப்பவும் இளம் பெண்கள் இருப்பது மாதிரி காட்சிகள் அமைக்கப்பட்டாலும், அதற்கெல்லாம் பொறுத்தமாகவே இருக்கிறது அவர் செய்யும் சேஷ்டைகளும்.

வெறும் பொம்மையாக வந்து போகாமல் பொறுப்பை உணர்ந்து நடிக்கவும் செய்திருக்கிறார் ஸ்ரேயா. சோகம், மகிழ்ச்சி, ஆற்றாமை, ஏமாற்றம் என்று எல்லா உணர்ச்சிகளையும் ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொண்டு ஜாலம் காட்டுகிறது அவரது கண்கள்.

எப்பவும் எரிந்து விழுகிற பணக்கார திமிரு சமீர் தத்தானி. காதலித்துவிட்டு போகட்டுமே என்பது மாதிரியே முதல் சில ரீல்களை இவர் தனுஷ§க்கு தாரை வார்த்துவிட்டு ஊருக்கு போகிறார். ஒரு காட்சியில் தனுஷ் வீசிய கல் டம்பளரில் விழாததற்கு இவர் சந்தோஷப்பட, "உன் காதல் ஜெயிக்கணும்னு நினைச்சுதான் கல்லை போட்டேன்" என்று தனுஷ் கூறுகிறாரே, செம கிளாப்ஸ் தியேட்டரில்.

கவுண்டரை பின்பற்றுகிறேன் பேர்வழி என்று துரு பிடித்த அருவாளால் கொத்தி எடுத்திருக்கிறார் ஸ்ரீநாத். சொந்த சரக்கை யூஸ் பண்ணுங்க பாஸ்.

'பட்டணம்தான் போகலாமடி' மெட்டை அப்படியே அடித்திருக்கும் ஒரு பாடலில் தனது திறமையை காட்டி ஆட வைக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். அப்பாடலும், ஆடியிருக்கும் மேக்னா நாயுடுவும் செமஹாட் மச்சி...

பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு குட்டியில்லை, பிரமாண்டம்!

ஆரம்பத்தில் இழுவை, இடையில் மிதவை, என்று ஜம்ப் அடிக்கிற திரைக்கதை. மித்ரன் ஆர் ஜவஹரின் 'மோகினி' ஆட்டம் என்று நினைத்து உள்ளே வந்தால், நன்றாக 'குட்டி' அனுப்புகிறார்கள்.