Puthumai Website -புதுமை வலைத்தளம்  

விக்ரம் - தமன்னாவுக்கு எடிசன் விருது

Picture
எடிசன் விருதுகளுக்கு உள்ள முக்கியத்துவம் வேறு. திரைப்படத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக எடிசன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.​ அந்த வகையில் 2009-ம் ஆண்டுக்கான எடிசன் விருது வழங்கும் விழா வருகிற 14ம்தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான,​​ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜே.செல்வகுமார் கூறியதாவது:-

திரைத்துறையினருக்கு ஆண்டுதோறும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டாலும் எடிசன் விருதுகளுக்கு உள்ள முக்கியத்துவம் வேறு.​ இந்த விருதுகள் சிங்கப்பூர்,​​ மலேசியா,​​ கனடா,​​ பிரிட்டன்,​​ ஆஸ்திரேலியா,​​ துபை ஆகிய நாடுகளில் உள்ள பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009-ம் ஆண்டின் சிறந்த நடிகராக விக்ரமும் நடிகையாக தமன்னாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.​ இவர்கள் தவிர,​​ திறமையான பல நடிகர்,​​ நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக 7 நாட்டு தொலைக்காட்சி சேனல்கள் சார்பாக கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.​ இதில் அந்தந்த நாட்டை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.​

அவர்களுடன் தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களும் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள். எடிசன் விருது வழங்கும் விழா,​​ சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் வருகிற 14ம்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.