Puthumai Website -புதுமை வலைத்தளம்  

வலிமை போகாத எம்.‌ஜி.ஆர்.

Picture
இன்றும் எம்‌ஜிஆர் நடித்தப் படங்கள் தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. திரையரங்கு உ‌‌ரிமையாளர்களைப் பொறுத்தவரை அவரது படங்கள் அட்சய பாத்திரங்கள். எத்தனைமுறைப் போட்டாலும் வசூலுக்கு குறைவிருக்காது.

எம்‌ஜிஆ‌‌ரின் மூன்றாவது தலைமுறை விஜய். அவருக்கும் பீல்டில் நிலைத்து நிற்க எம்‌ஜிஆர் தேவைப்படுகிறார். எம்‌ஜிஆர் படப் பெயர், எம்‌ஜிஆர் நடித்த காட்சிகள், வசனங்கள்...

விஜய்யை வைத்து சந்திரலேகா என்ற படத்தை எடுத்த நம்பிராஜனை நினைவிருக்கிறதா? இவர் தீவிர எம்‌ஜிஆர் பக்தர். வெறியர் என்று சொன்னால் ச‌ரியாக இருக்கும். இவர் இயக்கிய சந்திரலேகா, நிலா இரண்டும் சூப்பர் பிளாப். இதனால் தனது பெயரை எம்‌ஜிஆர் நம்பி என்று மாற்றி மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

இந்த புதுப்பெய‌ரில் இரண்டு படங்கள் எடுக்கிறார் எம்‌ஜிஆர் நம்பி. ஒன்று இவரது கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் தயா‌‌ரிப்பில் உருவாகும் பொறுத்திரு. இன்னொன்று நான்கு மொழிகளில் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் கால பைரவி.

ம்... 100 கோடியில் படம் எடுப்பவருக்கும் பெய‌ரில் எம்‌ஜிஆர் தேவைப்படுகிறார். இதுதான் உண்மையான மாஸ்.