Puthumai Website -புதுமை வலைத்தளம்  

வடிவேலுவிடம் பல கோடி மோசடி?

Picture
வடிவேலு தனது நிலையை கூறியுள்ளார்

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் பல கோடி ரூபாய்மோசடி செய்யப்பட்டதாக நகைச்சுவை நடிகர் வடிவேலு போலீஸôரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் சூர்யா,​​ வடிவேலு மற்றும் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார்,​​ ஏ.ஆர்.​ முருகதாஸ் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பைனான்சியர் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 19}ம் தேதி விடிய,​​ விடிய அதிரடி சோதனை நடத்தினர்.

விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலுவுக்குச் சொந்தமான வீடு,​​ அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.​ அதே நேரத்தில் மதுரை விரகனூரில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது.

இதில் சில முக்கிய சொத்து ஆவணங்களை சரிபார்த்தபோது,​​ பெரும்பாலானவை புறம்போக்கு நிலங்கள்,​​ சுடுகாட்டு மனைகள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து நிலம் வாங்கித் தந்த தனது நண்பர்கள்,​​ புரோக்கர்களிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்ட போது,​​ வடபழனி பகுதியைச் சேர்ந்த சிலர் வடிவேலுவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீஸôரிடம் ஆலோசனை பெறுவதற்காக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வடிவேலு செவ்வாய்க்கிழமை வந்தார்.

மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் சி.​ ஸ்ரீதர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து வடிவேலு தனது நிலையை கூறியுள்ளார்.

இதுகுறித்து துணை கமிஷனரிடம் கேட்டபோது,​​ வடிவேலு தனக்கு ஏற்பட்டுள்ள சில பிரச்னைகள் குறித்து வாய்மொழியாக தகவல்களை தெரிவித்தார்.​ இதுதொடர்பாக ஆதாரங்களுடன் புகார் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.​ இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் எதையும் அவர் அளிக்கவில்லை என்றார் ஸ்ரீதர்.