Puthumai Website -புதுமை வலைத்தளம்  

ரஜினி-விஜய்-அஜித்-குழப்பங்கள்.

Picture
கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜித் உள்ளதை உள்ளபடி பேசினார். விஜய் ரசிகனாக இருந்தாலும் அந்த இடத்தில் அஜித் என்னும் தைரியசாலிக்கும் உள்ளதை உள்ளபடி சொன்னதுக்கும் ஒருநிமிடம் நானும் அஜித் என்னும் வீரனுக்கு ரசிகனானேன். எழுந்து நின்று கைதட்டிய ரஜினியின் மனிதத்தன்மையை எண்ணி மனம் மகிழ்ந்தேன். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அசல் நாயகன் என தல நிரூபித்து விட்டார். அஜித்தின் பேச்சு சரியா தவறா என்ற விவாதத்தில் என் தீர்ப்பு சரியல்ல. மிக மிக சரி.ஆனால் இதற்க்கு பின் நடந்த கலைஞர் தொலைக்காட்சியில் அஜித்தின் காட்சி நீக்கம் எல்லாவற்றுக்கும் காரணம் விஜய் தரப்பு என்ற பேச்சு எழுந்தது. சிலவேளைகளில் இது உண்மையாக இருக்கலாம் யார் கண்டார். ஆனால் விஜய்க்கும்-கலைஞர்க்கும் இப்போது எட்டாப்பொருத்தமாக தோன்றும் நேரத்தில் இது எந்தளவிற்கு சாத்தியமானது என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை. வேண்டுமென்றே விஜய்-அஜித் எதிர்ப்பினை தூண்டுகின்றார்களா என்ற கேள்வியும் உண்டு? விஜய் தரப்பு அப்படி செய்ய காரணம் நான் அறியேன்? (கலைஞருக்கு விஜய் அம்புட்டு முக்கியமா ஐயா? அவர் தான் இப்போ டம்மி பீஸ் என்கிறார்களே.) மீறி செய்திருந்தால் அதை விட அசிங்கம் ஏதுமில்லை.

இது இப்படி இருக்க அஜித்தின் பேச்சுக்கு அமோக ஆதரவு தெரிவித்து வந்த ரஜினி இப்போது பின் வாங்கி இருக்கின்றார் என சொல்லவேண்டும். ரஜினி ரசிகர்கள் கோவித்துக்கொள்ளாதீர்கள் என் சந்தேகங்களே இவை? அத்தனை பேர் இருந்த மேடையில் மனதாரப் பாராட்டி மனிதனாக உயர்ந்து நின்ற ரஜினி இப்போது அஜித் தன் மனதில் உள்ளதை தான் பேசி இருக்கின்றார். ஆனால் கட்டாயப்படுத்தி யாரையும் வர வைக்கவில்லை என நேரெதிர் பல்டி அடித்த காரணம் யாதோ? அரசியல் அல்லது எந்திரன்வரும்நாள்நெருங்குதல்அல்லதுதன்மகள்திருமணத்துக்குபெரியவர்வந்துவாழ்த்தியதுஅல்லதுமிரட்டல்இதில்ஏதோஒன்றுஇல்லாமல்இல்லை. இல்லையேல்ரஜினிஎன்னசுயநலவாதியா? தன்பின்ரஜினிபலமாகஇருக்கின்றார்எனநம்பியஅஜித்துக்குவைத்தஆப்பா? அல்லதுஇதுவும்விஜயின்அரசியலா? (சும்மாதமாசுக்கு)

ரஜினி மறுத்தால் என்ன மறுக்காவிட்டால் என்ன அஜித் சொன்னது சரியே. அதற்காக சிலர் சொல்லலாம் அவர் தமிழின எதிரி எனவும் நான் அஜித்தின் கொள்கை பரப்புச் செயலாளர் எனவும். அவர்களுக்கு மீண்டும் சொல்கின்றேன் நான் விஜயின் பரமவிசிறி. கருணாநிதி அவர்களின் பாராட்டு விழாக்களில் பங்குபற்றி அதிகம் சலித்துப்போன ரஜினிக்கு இதுவும் சலித்ததால் அன்று கைதட்டி விட்டு இன்று மீண்டும் கலைஞரை சந்தித்த பின் கைகட்டுகின்றாரா? சரி அதையும் விடுவோம். அஜித் இன்று பெரியவரை சந்திக்க காரணம் ஏதோ? அன்று பேசியதற்கு மன்னிப்பா? அல்லது விளக்கமா? அல்லது மீண்டும் யாரும் மிரட்டுகின்றார்கள் என்ற தனிமையிலான கம்பிளையிண்டா அல்லது ரஜினியே அஜித்திடம் மன்னிப்புக்கேட்டு விடுங்கள் என சொன்னாரா? ரஜினியின் சொல்லை கேட்டு நடக்க அஜித் ஒன்றும் அவர் கைப்பிள்ளையும் இல்லை குழந்தையும் இல்லை என சொல்லலாம்.
ஆனால் இது அறிவுரையாக இருந்திருக்கலாம். உண்மைகள் ஏனோ உறங்கிக்கொண்டிருக்கின்றன. தெரிந்தவர்கள் என்ன நடக்கின்றது என சொல்லிவிடுங்கள். இல்லையேல் காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் அஜித் அசலா நசலா என்றும் ரஜினி நல்லவரா கெட்டவரா என்றும் விஜய் வேட்டைக்காரனா வேசக்காரனா என்றும்? காத்திருப்போம்.

ஜாக்குவார் பிரச்சனை போன்றவற்றை வைத்து பார்க்கும் பொது தல, நீங்க அல்டிமட் ஸ்டார் பட்டத்தை எடுத்த பின் கெட்டகாலம் கூடி இருக்கு ஏதோ பாத்து செய்யுங்க.

thanks to sathees