Puthumai Website -புதுமை வலைத்தளம்  

மேலும் ஒரு சுவாதி

Picture
அ‌ஜித், விஜய்யுடன் நடித்த சுவாதி ஏற்கனவே இங்கு இருக்கிறார். சமீபத்தில் இவர் யோகி திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவர் தவிர சுப்பிரமணியபுரத்தில் அறிமுகமான ஸ்வாதியும் பிஸியாக நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் விக்ரமுக்கு இந்த ஸ்வாதிதான் ஜோடி.

இந்த இருவ‌ரின் பெயர் குழப்பமே தலைவலியாக இருக்கும்போது மூன்றாவதாக ஒரு சுவாதியும் ஜோதியில் கலக்கிறார். இவர் மும்பையைச் சேர்ந்தவர்.

சத்திரம் பேருந்து நிலையம் படத்தை ரவிப்பி‌ரியன் என்பவர் இயக்குகிறார். இவர்தான் இந்த மூன்றாவது மும்பை சுவாதியை தமிழகத்துக்கு அழைத்து வந்திருக்கிறார். சத்திரம் பேருந்து நிலையத்தில் இவர்தான் நாயகி. ரோஷ், ராகேஷ் என்ற புதுமுகங்கள் நாயகர்கள்.

சுவாதிக்கு மேக்கப் போடும் போது அப்படியே புதுப் பெயர் ஒன்றையும் போடுங்கள்... குழப்பமில்லாமல் இருக்கும்.