Puthumai Website -புதுமை வலைத்தளம்  

மெகா பட்ஜெட் ராவண்

Picture
மணிரத்னத்தின் இருமொழிப் படம் ராவண் மேயில் திரைக்கு வருகிறது. படப்பிடிப்பை முடித்து ரஷ் பார்த்தவருக்கு சில இடங்களில் திருப்தியில்லை. உடனே யூனிட்டை கூட்டியவர் பொள்ளாச்சி சென்று ‌‌ரீஷூட் செய்து திரும்பியிருக்கிறார். போஸ்ட் புரொட‌க்சன் வேலைகள் இப்போது நடந்து வருகிறது.

இருமொழிப் படமான இதன் உத்தேச பட்ஜெட் அறுபது கோடி என்கிறார்கள். கேரளாவின் அடர்ந்த காட்டில் போடப்பட்ட அரங்கு மழையில் முற்றிலுமாக சேதமடைந்ததும், படப்பிடிப்பில் ஏற்பட்ட தடங்கல்களும் பட்ஜெட்டை எதிர்பார்த்ததைவிட சற்று அதிகமாக எகிற வைத்துள்ளது.

ராவண் படத்தில் மிருகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. யானையை நடிக்க வைத்தபோது அது பாகன் ஒருவனை கொன்ற சம்பவமும் நடந்தது. காளைகள், குதிரைகள், யானைகள் மட்டுமின்றி நாய்களும் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து உயர்ரக நாய்களை வரவழைத்திருக்கிறார்கள். இதற்கே பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

விலங்குகளை சினிமாவில் பயன்படுத்துவதற்கு இந்தியாவில் கடுமையான விதிமுறைகள் உள்ளன. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் குதிரை மீது ஆட்கள் சவா‌ரி செய்வதுபோல் காட்டியதையே அனுமதிக்க முடியாது என வம்படியாக விதிமுறை பேசினர். மணிரத்னம் படத்துக்கும் அப்படியொரு நெருக்கடி வருமா?

வராது என்று நம்புவோம்.