Puthumai Website -புதுமை வலைத்தளம்  

மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்: அஜீத் பேட்டி

Picture
முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாரட்டு விழாவில் காவேரி பிரச்சனை, இலங்கை பிரச்சனைகளூக்கெல்லாம் குரல் கொடுப்பதற்காக நடிகர்களை மிரட்டி அழைக்கிறார்கள் என்று பேசினார் நடிகர் அஜீத்.

இது குறித்து ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் நக்கீரன் வாரமிருமுறை இதழில்  ஒரு ஹீரோன்னா மக்களுக்கு நல்லது
சொல்றவனா இருக்கனும் என்று அஜீத்தை சாடியிருந்தார்.

இதனால் அஜீத் ரசிகர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும், தன் காரை உடைத்துவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார். அஜீத்திற்கு
ஆதரவாக ரஜினி குரல் கொடுக்கவும்,  ரஜினி ஒரு ஜோக்கர் என்று ஜாகுவார் என்று சொன்னார்.

மீண்டும் ஜாகுவார் வீடு தாக்கப்பட, மனைவியும் தாக்கப்பட ரஜினி ரசிகர்கள் ஆவேசம் கொண்டு தாக்கிவிட்டனர் என்று புகார்
கொடுத்துள்ளார்.

நடிகர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அஜீத், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அஜீத் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மிரட்டுகிறார்கள் என்று நீங்கள் பேசியது உங்களுடைய பாதிப்பா? இல்லை, யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினார்களா?முன்னதாக தயார் செய்துவிட்டு பேசவில்லை. திடீரென்று பேசினேன்.   (கையில் குறிப்பு சீட்டு எழுதிவைத்திருந்தார்-வீடியோ
ஆதாரம் இருக்கிறது) அந்த நேரத்தில்  என் ஆழ்மனதில் பதிந்திருந்ததை பேசினேன்.

நான் பேசியதில் எந்த தவறும் இல்லை.  உண்மையைத்தான் பேசினேன
சினிமா ஆர்ட்டிஸ்ட் எப்பவுமே ஒரு குரூப்பால நிர்ப்பந்திக்கப்படுறாங்க.


நடிகர்களை சமுதாயம்தான் உருவாக்குது? அந்த சமுதாயத்திற்கான போராட்டத்தில் பங்கெடுப்பது அவசியம்தானே?


இது ஒரு விவாதத்திற்குள்ளாக்கப்பட வேண்டிய விசயம்.  பிரபலமானவர்கள் மட்டும்தான் பொறுப்பாக வேண்டுமா. 

ஒவ்வொரு
குடிமக்களுக்கும் பொறுப்பு உண்டு.   பலர் போராட்டம் நடத்துகிறேன் என்று சொல்லி போராட்டத்தின் போக்கையே
மாற்றிவிடுகிறார்கள்.  போராட்டத்தை வீணடித்து விடுகிறார்கள்.


சமூக பிரச்சனைகளை தீர்க்க அரசும், அதற்கான அமைப்புகளும் இருக்கின்றன. அவை மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

கருத்து சொல்ல முடியாத நிலை இருக்கிறதா?

சினிமாவுல ரெண்டு குரூப் இருக்கு.  நாங்க இந்த ரெண்டு குரூப்புக்கு நடுவில மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்.


ஒரு நடிகனுக்கு அரசியல் குறித்தோ, மற்ற விவகாரங்கள் குறித்தோ முழுமையா தெரிந்தால்தான் போராட்டத்தில் இறங்க

வேண்டும்.    அறைகுறையாக தெரிந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கக்கூடாது என்று நினைக்கிறேன்.


பொதுப்பிரச்சனைக்கான போராட்டங்களின் போது மொழி, மதம், இனம் அடையாளப்படுத்தப்படுகிறது.

சினிமா தியேட்டருக்குள் சென்றபின் பக்கத்தில் இருப்பவன் எந்த இனம், மதம் அவன் பேசும் மொழி என்று பேதம் பார்த்து
ரசிகன் சினிமா பார்ப்பதில்லை.

கலைக்கு இருக்கிற பெரிய பவர் இதுதான்.  ஆனால் இந்த கலையுலகம் நடத்தும் போராட்டங்களின் போது மட்டும் மதம், இனம், மொழி எட்டிப்பார்க்கிறது.  அது தவறானது.