Puthumai Website -புதுமை வலைத்தளம்  

மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ

Picture
சிம்புவைப் பற்றி வரும் செய்திகளை‌க் கேட்டால் சிலிர்க்கிறது. சின்சியரான நடிகர், இவரைப் போல் யார் இருக்கார்? என்று சிலிகிக்கிறார் கௌதம்.

அந்தளவுக்கு ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறாராம்.
திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிப்பில் பூபதி பாண்டியன் சிம்புவை இயக்குவதாக இருந்தது. தற்போது பூபதி பாண்டியனை கழற்றிவிட்டு லிங்குசாமியே சிம்புவை இயக்க தீர்மானித்துள்ளார்.

லேட்டஸ்ட் செய்தியை‌க் கேட்டால் குளோராஃபார்ம் கொடுத்த மாதி‌ரி மயக்கமே வருகிறது. ராவண் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் சிம்புதான் ஹீரோவாம்.

ராவண் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இந்திப் படம் எடுக்கயிருப்பதாகவும், ரன்பீர் கபூர் நடிக்கயிருப்பதாகவும் முன்பே செய்திகள் வெளிவந்தன.

இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில்தான் சிம்பு நடிக்கிறாராம்.
சிம்பு, மணிரத்னம் தரப்புகள் இதுபற்றி வாய் திறக்கவில்லை என்றாலும் இந்த செய்திதான் கோடம்பாக்கத்தை சுழற்றி அடிக்கிறது.