Puthumai Website -புதுமை வலைத்தளம்  

புதுமுகங்களுக்கு பிரசன்னா அட்வைஸ்

Picture
"அட்வைஸ் பண்ணுறேன்னு நினைக்க வேணாம். உங்க பிரதர் மாதிரி நினைச்சு சொல்றேன். கேட்டுக்கோங்க" என்று மூன்று விஷயங்களை கூறி புதிய நடிகர், நடிகைகளுக்கு வழிகாட்டினார் பிரசன்னா.

அவர் சொன்ன விஷயங்களை அக்கறையோடு கேட்டுக் கொண்டார்கள் புதுமுக நடிகர், நடிகைகளான சத்யா, அரவிந்த், ஸ்ருதி, ப்ரீத்தி ஆகிய நால்வரும்.   பிரசன்னா அட்வைஸ் செய்த இடம் 'பாடகசாலை' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. அவர் கூறிய மூன்று விஷயங்களில் முக்கியமான விஷயம், என்னை வளர்த்தது பத்திரிகைகள்தான்.

அவர்களிடம் எப்போதும் நட்புறவோடு இருங்கள் என்பதுதான். குறிப்பிட்ட நேரத்திற்குள் ஷ§ட்டிங் ஸ்பாட்டில் இருங்கள் என்பது அவரது இன்னொரு அட்வைஸ். நானும் வேறொரு நிகழ்ச்சிக்கு போகணும். அதனால் இப்போ கிளம்புறேன் என்றார் உடனடியாக. இளம் புதுமுகங்கள் அத்தனை பேரும் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்பட, சற்றே வெட்கத்தோடு அவர்களுடன் போஸ் கொடுத்தார் பிரசன்னா.
 
பிரசன்னா நல்ல நடிகர். கூடிய விரைவில் அவருக்கான இடம் கிடைக்கும் என்று வாழ்த்தினார் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன். பாடசாலை தெரியும். அதென்ன பாடக சாலை? டைரக்டர் இதுக்கு விளக்கம் கொடுக்கணும் என்றார்.

ஆனால் டைரக்டர் தமிழ் விளக்கம் கொடுப்பதற்கு முன்பே, இயக்குனர் பவித்ரன் விளக்கினார். வேதங்களை கற்றுக் கொடுக்கிற இடத்தைதான் ‘பாடகசாலை’ என்பார்கள். டைரக்டரும் அதை நினைத்துதான் இந்த தலைப்பை வைத்திருப்பார் என்று நினைக்கிறேன் என்க, ஆமாம் என்றார் டைரக்டர் தமிழ்.