Puthumai Website -புதுமை வலைத்தளம்  

பாக்ஸ் ஆஃபிஸ் - முதலிடத்தில் கோவா  

Picture
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது கோவா. வெளியான முதல் மூன்று தினங்களில் ஆயிரத்தில் ஒருவன், குட்டி படங்களை இது பின்னுக்கு தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

5.
குட்டிதெலுங்கு ‌‌ரீமேக்கான குட்டிக்கு இதுவரை சென்னையில் 1.4 கோடிகளை மட்டுமே வசூலிக்க முடிந்துள்ளது. வீக்கான கதையும், திரைக்கதையும் குட்டியின் பலவீனங்கள். சென்ற வார இறுதி மூன்று தினங்களில் இப்படம் வசூலித்திருப்பது 8.84 லட்சங்கள்.

4.
ஜக்குபாய்இந்த வருடத்தின் மெகா பிளாப்களில் ஒன்று ஜக்குபாய். எதை எடுத்தாலும் பார்ப்பார்கள் என்ற கே.எஸ்.ரவிக்குமா‌ரின் மெத்தனத்துக்கு விழுந்த பே‌ரிடி. வெளியான முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 9.2 லட்சங்கள் மட்டுமே.

3.
ஆயிரத்தில் ஒருவன்செல்வராகவனின் படத்துக்கு இருவிதமான விமர்சனங்கள். ஈழத்தின் கதையிது என்று சிலர் தூக்கிப் பிடிக்கிறார்கள். ‌ரீமாசென் சோனியா, அழகம் பெருமாள் பொன்சேகா, சோழர்களை கொன்ற ராணுவம் ஈழத்தமிழர்களை கொன்ற இந்திய ராணுவம்... இப்படி. சோனியாவின் ஈகோதான் ஈழத்தமிழர்களின் சாவுக்கு காரணம் என்பது சின்ன குழந்தைக்கே தெ‌ரியுமே. அதை சொல்ல ஒரு படமா? இப்படம் இதுவரை 2.7 கோடிகளும், சென்றவார இறுதியில் 23.6 லட்சங்களும் வசூலித்துள்ளது.

2.
தமிழ்ப் படம்தமிழ்ப் படங்களின் கிளிஷேக்களை நையாண்டி செய்யும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு. விட்டால் கோவாவையே ஓவர்டேக் செய்துவிடும். சிவாவின் நடிப்பு படத்தின் பிளஸ். இந்த வருடத்தின் ஹிட்களில் இதுவுமொன்று. முதல் மூன்று தினங்களில் இப்படம் வசூலித்திருப்பது ஏறக்குறைய 26.5 லட்சங்கள்.

1.
கோவாகோவா இளமை‌க் கொண்டாட்டம். படத்தில் வரும் Gay மேட்டர் வசூலை பாதிக்க வாய்ப்புள்ளது. செங்கல்பட்டை தாண்டினால் படத்தின் காமெடி எத்தனை‌ப் பேருக்கு பு‌ரியும் என்ற கேள்வியும் உள்ளது. இவை அனைத்தையும் தாண்டி படம் ஹிட்டாகும் என்பது உறுதி. இதன் மூன்று நாள் வசூல் ஏறக்குறைய 47 லட்சங்கள்.இந்த வாரம் அசல் வெளியாவதால் அடுத்த வார பாக்ஸ் ஆஃபிஸில் மாற்றம் நிச்சயம்.