Puthumai Website -புதுமை வலைத்தளம்  

நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும்!!:தமிழ்ப் படம்

Picture
உலகத் தரத்துக்கு இணையாகத் தமிழ்ப் படம் எடுத்தால் நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்றார் திரு திரு துறு துறு திரைப்பட இயக்குநர் ஜே.எஸ்.​ நந்தினி.

​ ​ ​ திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும்,​​ சென்னை எம்.ஓ.பி.​ வைஷ்ணவா மகளிர் கல்லூரியும் இணைந்து பிஷப் ஹீபர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகம் குறித்த கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:

​ ​ ​ பெரும்பாலான ரசிகர்கள் மசாலா படங்களைத்தான் விரும்புகின்றனர்.​ எனவே,​​ தரமான திரைப்படத்துக்குப் பதிலாக மசாலா படத்தை எடுக்க வேண்டியுள்ளது.

​ ​ ​ உலகத் தரத்துக்கு இணையாக எடுக்கப்படும் மேலை நாட்டுப் படங்களில் வணிக ரீதியாகக் கவர்ச்சி சேர்க்கப்படுகிறது.

ஆனால், ​​ தமிழ்ப் படங்களில் பல விஷயங்களை கலந்து கொடுக்க வேண்டியுள்ளது.​ கதைக்குத் தொடர்பில்லாமல் நகைச்சுவைக் காட்சிகளைத் திணிக்க வேண்டியிருக்கிறது.

​ ​ ​ தமிழகத்தில் உலகத் தரத்துக்கு இணையான படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் 15 சதம் பேர் மட்டுமே உள்ளனர்.

மீதமுள்ள 85 சதம் பேர் தரமான படத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.​ இதுவே,​​ தரமான படம் எடுப்பதற்குத் தடையாக இருக்கிறது.

​ ​ ​ ஆனால்,​​ தமிழ்ப் படங்களையும் உலகத் தரத்துக்கு இணையாக எடுத்தால்,​​ நிச்சயம் ஆஸ்கர் விருதை வெல்லும் என்றார் நந்தினி.

​ ​ ​ ஜெயா தொலைக்காட்சி செய்திப் பிரிவு துணைத் தலைவர் கே.பி.​ சுனீல்,​​ இமேஜ் இன்போடெயின்மென்ட் நிறுவன மண்டல மேலாளர் ஏ.​ விக்ரம் உள்ளிட்டோர் பேசினர்.