Puthumai Website -புதுமை வலைத்தளம்  

தீராத விளையாட்டு பிள்ளை!

Picture
முதலில் விஷாலைப்பற்றி பாப்பம் இந்த படத்திலையும்  விஜயையின் நடிப்பையே தொடர்ந்திருக்கார் . இந்த படத்திலும் பாடல்களிலும் சண்டையிலும் வளமை போல சும்ம பிரிச்சு மேஞ்சிருக்கார் விஷால் .


இப்படத்தின் கதையை பார்ப்பம்

விஷாலுக்கு சின்ன வயசில் இருந்து எதா இருந்தாலும் பெஸ்ட் தான் வேணும் அதனால கல்யாணத்துக்கு மூணு பெண்ணை செலக்ட் பண்றாரு, கடைசியில் யாரை கைப்பிடிக்கிறார் என்பது தான் கதை.இவ்ளோ பெஸ்ட் தேடுராரே ஏன் படத்தில் விஷால் அவருக்கு ஒரு நல்ல வேலை தேடலைன்னு எல்லாம் கேக்க கூடாது.


நான் பச்சீன கி அசீனா படம் ஹிந்தியில் பார்க்கவில்லை, அதனால் அந்த படத்தின் தழுவலா என்று எனக்கு  தெரியாது

முதல்ல படத்தில் சந்தானம் பத்தி சொல்லி ஆகணும். செம அதகளம் பண்ணியிருக்காரு அதுவும் கல்யாண மண்டபத்தில் அடிக்கும் லூட்டி செம....அவர் மயில்சாமியை பார்த்து "நிக்காத விரலுக்கு எதுக்குடா நக பாலிஷ்" என்று டபுள் மீனிங் என்றாலும் நல்ல உதாரணம்.விஷால் தனுஸ்ரீயை மடக்கிவிட்டதாக சந்தானத்திடம் வந்து அவ என் கைய பிடிச்சிக்கிட்டு ப்ளீஸ்ன்னு சொன்னாடா.." என்பர் அதற்கு சந்தானம் "நீ அவ மேல எங்கே கையை வெச்ச" என்று கவுண்டர் கொடுப்பார் செம... இனிமே தமிழ்ப்படத்தில் யாரும் நான் மதுரைகாரன்னு சொல்ல மாட்டாங்க அந்தளவு சந்தனம் கலாய்ச்சீரிக்கிறார்.


அடுத்தது நீத்து சந்திரா, படத்தில் இவங்க 1500 கோடிக்கு சொந்தக்காரி ஆனாலும் பாவம் ரொம்ப மினி டிரஸ்இல் தான் வராங்க.அருமையா அவங்க திறமையை வெளிப்படுத்தி இருக்காங்க.ரெண்டாவது பாதியில் வரும் பாட்டு போர்என்றாலும் நீத்துகாக பார்க்கலாம்.நீத்துவின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை என்பதில் எந்த ஐயமும் இல்லை.


பிரகாஷ்ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவாக செய்து இருக்கிறார்.மௌலி சார் நோ சான்ஸ் அவரும் தன் பங்குக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறார்.மயில்சாமி தன் வழக்கமான நடிப்பில் சிரிக்க வைக்கிறார்.அவர் கூறும் ஒரு உதாரணம் "கட்டிங் கட்டிங் சேர்ந்தா தான் குவாட்டர் அது மாதிரி மனசும் மனசும் சேர்ந்தா தான் மேட்டர்".


தனுஸ்ரீ தத்தா கெழடு தட்டு போச்சின்னு சொல்லணும், பின்னே ஹிந்தி,தெலுங்குனு மார்க்கெட் இழந்த நடிகையை நடிக்க வச்சா என்ன பண்றது.சாரா, அவரின் முகம் சட்டென்று நியாபகம் வர மாட்டிக்குது.இருந்தாலும் நீத்து சந்திரா போல வருமா...

யுவன் இசை நன்று அதுவும் விஷால் ஒரு ஒரு பெண்ணாக கரெக்ட் பண்ணும் போது நெற்றிக்கண் மியூசிக் செம. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு பத்தி சொல்லவே தேவை இல்லை.அரவிந்த் கடைசியில் டாக்டர் ஆகவும் வருகிறார்.சிநேகா ஒரு சீன் மட்டும் வந்து செல்கிறார்.


படம் மொத்தம் 2.45 மணி நேரம் ஓடுது.முதல் பாதி சந்தானம் காமெடி மற்றும் விஷாலின் காதல் என்று டைம்பாஸ் ஆகிறது.ரெண்டாவது பாதியில் பாட்டுக்கள் தடைகளாக இருக்கின்றன.மற்றபடி எதிர்ப்பாராத திருப்பங்கள் எல்லாமே சூப்பர்.அப்புறம் விஷால் படத்தில் லாஜிக் பார்க்ககூடாதுன்னு நான் படம் பார்க்க முன்னமே முடிவு பண்ணிட்டேன்.இல்ல நான் விஷால் கிட்ட இருந்து உலக சினிமா அல்லது யதார்த்த சினிமா எதிர்ப்பார்ப்பேன் என்றால் தீ.வி.பி.யை தவிர்ப்பது நலம்.

விஷால் பைட் சீன் எல்லாம் கொஞ்சம் ஓவர்.மற்றபடி இந்த படத்திலும் பெண்களுக்கு எதிராக வசனம் பேசி நம்மிடம் கைத்தட்டு வாங்குகிறார்.கிளைமாக்ஸ் செம நாடகம்.தீராத விளையாட்டு பிள்ளை முதல் பாதியில் ஒரே சிரிப்பு தான் ரெண்டாவது பாதியில் சில இடங்களில் தேக்கம்.

மொத்தத்தில் தீராத விளையாட்டு பிள்ளை அசல் வேட்டைகாரன் போல் ஏமாற்றம்