Puthumai Website -புதுமை வலைத்தளம்  

தம்பி மார்க்கெட்; தவிக்கும் அண்ணன்

Picture

“கவலைப்படாதீங்க பிரதர் நாங்க பார்த்துக்கிறோம்


ஸ்ரீராமஜெயம் மாதிரி விஷாலின் ராசியில் தொடர்ச்சியான சோதனைகள் எழுதப்பட்டு வருகிறது. தம்பியின் மார்கெட் சூடு பிடிக்காவிட்டாலும் ஏகப்பட்ட செலவு செய்துதான் தீராத ’விளையாட்டுப்பிள்ளை’யை உருவக்கியுள்ளார் விஷாலின் அண்ணன் விக்ரம்கிருஷ்ணா. எட்டு கோடிக்கும் மேலான பட்ஜெட்டை எப்படி மீட்டெடுப்பது என கையை பிசைந்துகொண்டிருந்த விக்ரமிற்கு உதவிக்கரம் நீட்டியது சன் பிக்சர்ஸ்.


“கவலைப்படாதீங்க பிரதர் நாங்க பார்த்துக்கிறோம்” என உறுதி கொடுத்த சன் நிறுவனம், விக்ரமிடம் வியாபாரம் பேசி 14 கோடிக்கு படத்தை வாங்கியதாம். அக்ரிமெண்ட் சைன் ஆனபிறகு அப்பாடான்னு பெருமூச்சுவிட்ட விக்ரமிற்கு ஒரு சில நாட்களிலேயே சன் நிறுவனத்திடமிருந்து போன். எடுத்து பேசியவரிடம், உங்க தம்பிக்கு எந்தெந்த ஏரியாவுல எவ்வளவு பிஸினஸ் என்கிற லிஸ்ட் வேணும் என கேட்க விக்ரமும் உடனே லிஸ்ட் அனுப்பியுள்ளார். லிஸ்டில், NSC ஏரியாவில் மட்டும் விஷாலுக்கு 7 கோடி பிஸினஸ் இருப்பதாக காட்டப்பட்டிருந்ததாம்.


லிஸ்ட் போய்ச்சேர்ந்த சிலமணி நேரங்களில் மீண்டும் போன். தம்பிக்கு NSC ஏரியாவிலதான் ஏழு கோடி பிஸினஸ் இருக்குல. அந்த ஏரியாவ நீங்களே வச்சுக்குங்க மீதி ஏழு கோடிய மட்டும் நாங்க தர்றோம். என அக்கிரிமெண்டை மாற்ற நொந்து போனாராம் விக்ரம்.


நாங்க பார்த்துக்குறோம்னு சொன்னதின் அர்த்தம் லேட்டாதான் புரிந்திருக்கும்!

Star Rating Start
4.7 / 5 - 3 vote(s).
MyPagerank.Net

Back To Home