Puthumai Website -புதுமை வலைத்தளம்  

தமிழ்படங்களில் நடிக்க திரிஷா, ஸ்ரேயா, பிரியாமணிக்கு தடை?

Picture
முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் வருகிற 6-ந் தேதி சென்னையில் பிரமாண்ட பாராட்டு விழா நடக்கிறது. இதில் நயன்தாரா, ரீமாசென், உள்ளிட்ட பல நடிகைகள் நடனம் ஆடுகின்றனர்.

ஆனால் திரிஷா, ஸ்ரேயா, பிரியாமணி, பாவனா நால்வரும் நடனமாட மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என “பெப்சி” முடிவெடுத்து உள்ளது.

இதனால் இந்த 4 பேரும் தமிழ் படங்களில் நடிக்க சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நடனம் ஆடாத சில ஹீரோக்களுக்கும் “ரெட்” போடப்படுகிறது.