Puthumai Website -புதுமை வலைத்தளம்  

செல்வராகவனின் சிந்துபாத்

Picture
மார்ச் முதல் வாரத்தில் அமெ‌ரிக்கா செல்கிறார் செல்வராகவன். விக்ரமை வைத்து இயக்கும் த்‌ரில்லர் படத்துக்காகதான் இந்தப் பயணம்.

இந்த த்‌ரில்ல‌ரின் முதல்கட்ட படப்பிடிப்பு லடாக்கில் நடந்தது. விக்ரம் சுப்பிரமணியபுரம் ஸ்வாதி கலந்து கொண்டனர். இந்நிலையில் ஸ்வாதியின் நடிப்பில் திருப்தி இல்லாததால் அவரை செல்வராகவன் மாற்றப் போவதாக செய்திகள் வெளியாயின. மேலும், ‌ஜி.வி.பிரகாஷுக்குப் பதில் இந்தி இசையமைப்பாளரை பயன்படுத்தயிருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்த இரண்டு செய்திகளையும் செல்வராகவனின் அலுவலக வட்டாரம் மறுத்துள்ளது. படத்தில் சுவாதி, ‌ஜி.வி.பிரகாஷ் இருவரும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

செல்வராகவன் சிந்துபாத் என்ற பெயரை சேம்ப‌ரில் பதிவு செய்துள்ளார். அனேகமாக தனது த்‌ரில்லர் படத்துக்கு அவர் தேர்வு செய்திருக்கும் பெயர் இதுவாகவே இருக்கும் என்கிறார்கள்.