Puthumai Website -புதுமை வலைத்தளம்  

சிம்பு பர்த்டே மெசேஜ்!!!

Picture
நடிகர் சிம்பு தனது 27வது பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடினார். சென்னை தி.நகரில் உள்ள பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் ஏராளமான ரசிகர்கள் முனனிலையில் பிரமாண்ட கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

சிம்புவின் 25வது திரைப்படமான விண்ணைத்தாண்டி வருவாயா விரைவில் வெளிவரவுள்ளதால் ரசிகர்களிடம் உற்சாகம் அதிகரித்து காணப்பட்டது. பிறந்தநாள் விழாவின் போது ரசிகர்களிடையே பேசிய சிம்பு, நான் அரசியலுக்கு வந்துதான் நல்லது பண்ணனும்னு இல்ல.

சினிமா துறையில இருந்தே நல்லது பண்ணலாம், என்னோட படங்களில இனி விரல் காட்டுவது போன்ற சிம்பல் இருக்காது, என்றார்.

நடிகர் சிம்பு சமீபத்தின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற தனது பட்டத்தை யங் சூப்பர் ஸ்டார் என்று மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டத்தை மாற்றியதைப் போலவே தனது நடிப்பிலும், தனது படத்தில் இடம்பெறும் காட்சிகளிலும் மாற்றம் இருக்கும் என்பதை உறுதிபட கூறுகிறார் சிம்பு.