Puthumai Website -புதுமை வலைத்தளம்  

சினிமாவில் அரசியலை நுழைத்து கெடுத்துவிட வேண்டாம்: கருணாநிதி

Picture
சினிமாவில் அரசியலை நுழைத்து கெடுத்துவிட வேண்டாம் என சென்னையில் தமிழ் திரைபடத் துறையினர் நடத்திய பாராட்டு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு, தமிழ் திரையுலகம் சார்பில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கருணாநிதி தனது ஏற்புரையில் கூறியதாவது:
 
இந்த இனிய விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து, வாழ்த்தியும், சில நல்ல அறிவுரைகளை வாழ்த்தியவர்களுக்கும், திரை உலகத்தினருக்கும் எடுத்துக் கூறியுள்ள இந்தியாவினுடைய தலைசிறந்த கலைஞர் அமிதாபச்சனுக்கு நான் முதற்கண் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நாமெல்லாம் இங்கே ஒன்று சேர்ந்திருப்பது அரசியல் ரீதியாக அல்ல.நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று சொல்வது கலைக் குடும்பம் என்ற அந்த வார்த்தையின் அடிப்படையிலே தான் இங்கே ஒன்று சேர்ந்திருக்கிறோம்.

இதிலே அரசியலை நுழைக்க நான் விரும்பவில்லை.அரசியல் தானாக நுழைந்தால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல.அரசியலை நுழைத்து இதை யாரும் கெடுத்து விடாதீர்கள்.

அரசியலை நுழைத்து மேலும் நன்மைகளைச் செய்ய வேண்டுமேயல்லாமல், அரசியல் நுழைந்தால், ஆமை புகுந்த வீடாக இந்தத் திரைப்படத் துறை அமைந்து விடக் கூடாது என்பதில் நான் மிகுந்த அக்கறையாக இருக்கிறேன்.ஆகவே அரசியலை நுழைக்க வேண்டாம்.
 
இவ்வாறு அவர் பேசினார்.

Back To Home



இந்த செய்தியை படித்தவர்கள்