Puthumai Website -புதுமை வலைத்தளம்  

சண்டியாகும் சங்கீதா

Picture
சங்கீதா ஒரு படத்தில் நடித்தால் குறைந்தபட்சம் அவரது கேரக்டராவது வித்தியாசமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. உயிர் படத்துக்குப் பிறகு வித்தியாசமான கேரக்டர்கள் மட்டுமே அவரை‌த் தேடி வருகின்றன.

வெளிப்படையான வில்லியாக சங்கீதா இதுவரை நடித்ததில்லை.
 
அதாவது படையப்பா ரம்யா கிருஷ்ணன் மாதி‌ரி, திமிரு ஸ்ரேயா ரெட்டி மாதி‌ரி. உயி‌ரில் கூட குடும்பத்திலிருந்து குழி பறிக்கும் கேரக்டர்.

இந்த நீண்டநாள் குறையை தீர்க்க வருகிறது தம்பிகோட்டை.
அம்மு ரமேஷ் இயக்கும் இந்தப் படத்தில் சங்கீதா தாதாவாக வருகிறார். ஹீரோவுக்கு சவால்விடும் வில்லி பாத்திரம்.

பிய்த்து உதறியிருக்கிறார் என்கிறார்கள் யூனிட்டில். படம் வெளிவந்தால் ரகுவரனின் இடம் சங்கீதாவுக்குதான் என்கிறார்கள். ம்... பார்ப்போம்.