Puthumai Website -புதுமை வலைத்தளம்  

கோ-வில் பியா

Picture
டூ பீஸ், முத்தக் காட்சி எதிலும் நடிக்க‌த் தயார் என ஒரு மார்க்கமாகதான் பேட்டியளித்திருந்தார் பியா. இந்த ஓவர் துணிச்சலுக்கு யாரும் செவி சாய்த்ததாக தெ‌ரியவில்லை. காரணம் புதுப் படம் எதிலும் ஒப்பந்தமாகவில்லை பியா. கவலையில் இருந்தவருக்கு அடித்திருக்கிறது மெகா ஜாக்பாட்.

கே.வி.ஆனந்த் இயக்கும் கோ படத்தில் பியா 2வது ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கோ-வில் தமன்னா, சிம்பு நடிப்பதாக இருந்தனர். முதலில் தமன்னாவை நீக்கிவிட்டு கார்த்திகாவை ஒப்பந்தம் செய்தனர். பிறகு சிம்பு நீக்கப்பட்டு ‌‌ஜீவா. இந்தப் படத்தில் அ‌ஜ்மல் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு பியா ஜோடி என்கிறார்கள்.

கோ-வுக்கு ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைக்கிறார்.