Puthumai Website -புதுமை வலைத்தளம்  

கிளாமர் என் முழு வேலை அல்ல!

Picture
  தமிழ் தவிர வேறு எந்த சினிமாவிலும் கவனம் செலுத்தாமல் இருந்தேன்

கடந்த வருடம் படங்கள் குறைந்து விட்டதே?

2009-ல் குறிப்பிடும் அளவுக்கு படம் வராதது ஏமாற்றம் தான். தமிழில் "அ ஆ இ ஈ' என்ற ஒரே படம் ரீலிஸ் ஆனது. இதைத் தவிர கன்னடத்தில் ஒரு படம் வெளிவந்தது. மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைவு. இதற்காக நான் கவலைப்படவில்லை. ஆனால் வெளிவந்த இரண்டு படங்களும் நல்ல படங்கள். படப்பிடிப்பு முடிந்துள்ள "வர்ணம்', "அகராதி' ஆகிய படங்கள் கடந்த ஆண்டே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஜனவரிக்குப் பின் அந்த படங்கள் வெளியாகின்றன.

பிற மொழி சினிமாவில் கவனமாக இருக்கிறீர்களா?

அப்படி ஒன்றுமில்லை. தமிழ் தவிர வேறு எந்த சினிமாவிலும் கவனம் செலுத்தாமல் இருந்தேன். கன்னடத்தில் வாய்ப்புகள் வந்தது. கதையும் பிடித்திருந்தது நடித்து வருகிறேன். ஒரு படம் வெளிவந்த நிலையில், இந்த ஆண்டு "நிஜது இதுலியே' என்ற படம் வெளிவருகிறது. சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ராகுலின் ஜோடியாக நடித்திருக்கிறேன். தமிழில் இப்போது "கௌரவர்கள்' என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறேன். தெலுங்கு, மலையாள உலகிலும் வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன். தமிழில் சில படங்களை ஒப்புக் கொண்டு, நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறதே?

கதையும், என் கேரக்டரும் பிடித்திருந்தால் நிச்சயம் அந்தப் படத்தில் நான் இருப்பேன். நான் நடிக்க வேண்டிய படங்களை நான்தான் தேர்வு செய்கிறேன். நான் மட்டுமே கதை கேட்கிறேன். அப்படியிருக்கும் போது இந்த தவறுகள் எப்படி நிகழும். இப்போதும் கூட நிறைய கதைகள் கேட்டு வருகிறேன். பிடித்திருந்தால் ஓகே அவ்வளவுதான். இதில் பிரச்னைகளுக்கு இடமில்லை. என்னைப் பற்றிய கிசு கிசுக்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

"சிலந்தி' மாதிரியான படங்கள்...

கிளாமர் எனக்கு பிடித்த ஒன்று. அதை முழுமையாகச் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் விளைவுதான் "சிலந்தி'. அந்த சினிமாவின் தாக்கம் என்ன என்பதை நான் புரிந்துக் கொùண்டு விட்டேன். தொடர்ந்து அது மாதிரி நடிக்க விருப்பமில்லை. நடிகைக்கு கிளாமரும் முக்கியம். அதனால் அதைச் செய்தேன். அதை முழு நேரமாகச் செய்ய எனக்கு தெரியாது. விருப்பமும் இல்லை. "அழகி' படத்தில் தனலட்சுமியை ரசித்தவர்களுக்கு "சிலந்தி' பிடித்திருக்காது எஎன்பதும் எனக்கு தெரியும். கிளாமர் என் முழு வேலை இல்லை. அதைத் தாண்டிய சினிமா இருக்கிறது. அது வருங்காலங்களில் உணர்த்துவேன்.


Back To Home



இந்த செய்தியை படித்தவர்கள்