Puthumai Website -புதுமை வலைத்தளம்  

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

Picture

ஆமதாபாத்தில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் என்ற பிரபல பிசினஸ் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ஷாருக்கான், அமீர்கான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர்.
மாணவ- மாணவிகளுக்கு பாடமும் நடத்தி உள்ளனர். 


அவர்களை தொடர்ந்து நடிகை ஸ்ரேயாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தெலுங்கு, தமிழ் படங்களில் ஸ்ரேயா முன்னணி நடிகையாக உள்ளார். அவர் நடித்த “சிவாஜி” தமிழ் படம் இந்தியில் “டப்பிங்” செய்து வெளியிடப்பட்டது. இதன் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளார். 


ஆமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மென்ட் கல்லூரி ஸ்ரேயாவை ஒரு நாள் தங்கள் கல்லூரியில் பாடம் நடத்த வரும்படி அழைப்பு விடுத்தது. அதை ஏற்று 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருநாள் ஆசிரியையாக இருந்து பாடம் நடத்தினார். சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். 


இதுபற்றி ஸ்ரேயா கூறும்போது, "திரைப்பட பிசினஸ் பற்றி பாடம் நடத்த அக்கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதற்காக இந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்படங்கள் பற்றி 5 நாட்கள் படித்து விஷயங்களை தெரிந்து கொண்டேன். சர்வதேச அளவில் நமது திரைப்படங்களின் மார்க்கெட் நிலவரம் குறித்தும் விவரங்கள் சேகரித்தேன். பிறகு மாணவ-மாணவிகள் மத்தியில் அதுபற்றி சொற்பொழிவு நிகழ்த்தினேன். மறக்க முடியாத அனுபவமாக இருந்தது."  என்கிறார் ஸ்ரேயா.