Puthumai Website -புதுமை வலைத்தளம்  

கட்சி மாறிய சுனைனா

Picture
நகுலின் கைப்பாவையாக இருந்த சுனேனா இப்போதுதான் தாமாகவே ஒவ்வொரு படங்களின் கதையையும் கேட்டு கால்ஷீட் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அப்படி அவர் கொடுத்துள்ள படம்தான்.... படத்தின் பேரு இன்னும் வைக்கலீங்க. இந்தப் படத்தை இயக்குகிறார் ‘பசங்க’ புகழ் பாண்டிராஜ். கதாநாயகன் வேறுயாருமல்ல. கலைஞரின் பேரன் அருள்நிதிதான்.

யாரை இவருக்கு ஜோடியாக்கலாம் என்று யோசித்து யோசித்து ஓய்ந்து போன பாண்டிராஜ் கடைசியாக சுனைனாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் இந்தப் பட்சியோ இதுவரை நகுலிடம் கேட்டு கேட்டுதான் ஒவ்வொன்றையும் செய்து வந்தது. இப்போது தாமாகவே துணிந்து கதை கேட்டு களம் இறங்கியுள்ள சுனைனா கட்சி மாறிவிட்டார். அடுத்து அவர் யார் கட்சி என்பது விரைவில் தெரியவரும்.