Puthumai Website -புதுமை வலைத்தளம்  

ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

Picture
ஹைதி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோருக்காக நிதி திரட்ட அமெரிக்காவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஹாலிவுட் நடிகர்கள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

ஆஸ்கரை தொடர்ந்து கிராமி விருதுகளையும் பெற்ற ஏ.ஆர். ரகுமானுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரகுமான், மைக்கேல் ஜாக்சனின் வி ஆர் தி வேர்ல்ட் என்ற பாடலை பாடுகிறார்.

ஆப்பிரிக்காவில் மனித நேயத்தை வலியுறுத்தி நடந்த இசை நிகழ்ச்சியில் ஜாக்சன் பாடிய பாடலிது.   ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் கர்லோஸ் சந்தனா, ஜெனிபர் ஹட்சன், ஜெமி ஃபாக்ஸ், ஜேசன் மராஸ், பிரைன் வில்சன் உட்பட பலர் இதில் பங்கேற்று பாட உள்ளனர்.