Puthumai Website -புதுமை வலைத்தளம்  

எனக்கு லட்சியமே இல்லை : நயன்தாரா பளீச்!

Picture
எனக்கு குறிப்பிட்டு சொல்லும்படி எந்த லட்சியமும் இல்லை

எனக்கு குறிப்பிட்டு சொல்லும்படி எந்த லட்சியமும் இல்லை என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுடனும், மலையாளத்தில் ஷ்யாம் பிரசாத் ஜோடியாக ஒரு படத்திலும், தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்திலும் கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாக ஒரு படத்திலும் என 4 ‌மொழிகளில் பிஸியாக இருக்கிறார் நயன்தாரா.

அவர் அளித்துள்ள பேட்டியில், நான் 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம்தேதி திரையுலகத்திற்கு வந்தேன். பொதுவாக சினிமாவுக்கு வருபவர்கள் பெயரும், புகழும் பெற வேண்டும். பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் நான் சினிமாவுக்கு வரும்போது எனக்கு எந்தவித ஆசையும் கிடையாது. ஒரே ஒரு படம் நடித்து விட்டு போய்விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வந்த பின் சினிமாவுடன் ஐக்கியமாகி விட்டேன். நான் எதிர்பார்த்திராத அளவுக்கு பெயர், புகழ், அந்தஸ்து கிடைத்தது. சினிமாவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். குறிப்பிட்டு சொல்லும்படி எந்த லட்சியமும் இல்லை. நல்ல படங்கள் அமைய வேண்டும். பெயர், புகழுடன் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை, என்று கூறியுள்ளார்.

திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், என் திருமணம் எப்போது நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் சரியான நேரத்தில் நடக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வர வேண்டும் அல்லவா? ஒன்று மட்டும் உறுதி. என் திருமணம் அம்மா - அப்பா அனுமதியுடன்தான் நடைபெறும். யாருடன் நடக்கும் என்பது தெரியாது, என்று கூறியிருக்கிறார்.


Back To Home