Puthumai Website -புதுமை வலைத்தளம்  

உத்தமபுத்திரன் ஆகிறார் சிலம்பரசன்

Picture
வம்பு நடிகர் இப்ப உத்தமபுத்திரன் ஆகப்போகிறார்

வம்பு நடிகர் என்ற பெயரெடுத்த சிலம்பரசன் விரைவில் உத்தமபுத்திரன் ஆகப்போகிறார். தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு, அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கோ படத்தில் நடிக்கிறார். அந்த படத்தினை தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பெயர்தான் உத்தமபுத்திரன்.

டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை டைரக்டர் பூபதி பாண்டியன் இயக்கப் போகிறாராம். படத்தின் உத்தமபுத்திரனுக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை.


Back To Home