Puthumai Website -புதுமை வலைத்தளம்  

ஆஸ்கார் ஆசை இல்லை ; கமல்ஹாசன்

Picture
2010 என்ற கல்லூரிகளுக்கிடையேயான கலைநிகழ்ச்சியின் நிறைவு விழாவில் நடிகர் கமலஹாசன்

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ரிவேரா 2010 என்ற கல்லூரிகளுக்கிடையேயான கலைநிகழ்ச்சியின் நிறைவு விழாவில் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஸ்வநாதன் பேசுகையில், ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக ஆஸ்கர் விருதும் மற்றும் கிராமி விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், திரையுலகில் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான ஒரே நபர் கமலஹாசன்தான் என்றும், அந்த விருது விரைவில் கமலை வந்தடையும் என்றும் கூறினார்.

நிகழ்ச்சியின்போது மாணவர்களிடம் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது ஆஸ்கார் விருது குறித்து மாணவ - மாணவிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த கமல், எனக்கு ஆஸ்கார் ஆசையெல்லாம் இல்லை. நம் இந்தியாவில் நடைபெறும் விழாவில் அமெரிக்கர்கள் விருது பெற வேண்டும்.

அமெரிக்கர்களுக்கு நாம் விருது கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. அது கண்டிப்பாக நடக்கும், என்றார். வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் திரைக்கதை, வசனம் எழுத பயிற்சி தர தான் தயாராக இருப்பதாகவும் கமல்ஹாசன் கூறினார்.