Puthumai Website -புதுமை வலைத்தளம்  

ஆயிரத்தில் ஒருவனுக்கு ஆப்பு

Picture
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த ராஜராஜ சோழன் தமிழர்களின் தனி அரசை அமைத்தார்.

'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை திரையிடுவதற்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக,​​ சென்னை உயர் நீதிமன்றத்தில் சோழர் பேரவையின் தலைவர் டி.வி.கே.அழகிரி தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த ராஜராஜ சோழன் தமிழர்களின் தனி அரசை அமைத்தார்.

குடி ஆட்சி,​​ கிராம நீதிமன்றங்கள்,​​ நீர்ப் பாசனத்துக்கு 'கல்லணை',​ தஞ்சை பெரிய கோயில் என அவரது ஆட்சியில் ஏராளமான சாதனைகள் செய்யப்பட்டன.

அதேபோல், ​​ முதலாவது நூற்றாண்டில் அமைந்த சோழர் ஆட்சியில் வெளிநாடுகளுடன் வாணிகத் தொடர்பு உள்ளிட்டவை இருந்துள்ளன.​ சோழர்களின் ஆட்சிக் காலத்தைப் 'பொற்காலம்' என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில்,​​ செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் சோழர்கள் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.​ அரசனுக்காக மனித உயிர்ப் பலி அளிப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.​ இந்தத் திரைப்படத்தின் தொடக்கத்தில் இது ஒரு கற்பனைக் கதை என்று கூறப்பட்டுள்ளது.​ ஆனால்,​​ படத்தில் சரித்திரக் காலப் பெயர்களே இடம்பெற்றுள்ளன.

இதனால்,​​ அவை உண்மையானது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.​ இது தமிழ் மக்கள் மத்தியில் சோழ அரசர்களைப் பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்கும்.

எனவே,​​ இந்தப் படத்தை திரையிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும்.​ அதற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

நீதிபதி மணிவாசகன் முன்னிலையில் இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி,​​ இதுதொடர்பாக பிப்ரவரி 17-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கிரீன் வாலி தயாரிப்பு நிறுவனம்,​​ இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


Back To Home



இந்த செய்தியை படித்தவர்கள்