Puthumai Website -புதுமை வலைத்தளம்  

அஜித்தின் 50ஆவது படம்

Picture
அஜித்தின் 50ஆவது படத்தை கெளதம் வாசுடெவ் மேனன் இயக்கிறார் இப்படத்தில் கெளதம் மேனனின் ஆஸ்தான நடிகை சமீரா ரெட்டி நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை தயானிதி அழகிரி தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப்படத்துடன் சேர்த்து சமீர ரெட்டி கெளதம் மேனனின் மூன்றாவது படத்தில் நடிக்கிறார் என்பதும் ஏற்கனவே வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் அசல் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எற்கனவே அஜித்துடன் பலமுறை கெளதம் இணைவதென்று செய்திகள் வெளியாகி பின்னர் அது பொய்யாகிப்போனது ஆனால் இம்முறை நடிகை தயாரிப்பாளர் ஆகிய அனைத்தும் உறுதி செய்யப்பட்டதால் அஜித்தின் 50ஆவது படம்  கெளதம் மேனனின் படம் என்பது உறுதியாகியுள்ளது.