Puthumai Website -புதுமை வலைத்தளம்  

அசல் படம் பார்த்தால் தங்கம் பரிசு!

Picture

அசல் படம் மாபெரும் வெற்றி


அஜித்தின் அசல் படம் பார்க்க வரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தங்கப்புதிர் ‌போட்டியை அறிவித்திருக்கிது அசல் டீம்! தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்‌கொண்டிருக்கும் அசல் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு தியேட்டர்களில் ஒரு ‌போட்டி கூப்பன் வழங்கப்படுகிறது. அந்த கூப்பனை நிரப்பி, அசல் படம் பார்த்தற்கான டிக்கெட்டை இணைக்க வேண்டும்.


குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் ரசிகர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. முதல் 30 நபர்களுக்கு தலா 1 பவுன் தங்க நாணயமும், இரண்டாவது 30 நபர்களுக்கு தலா அரை பவுன் தங்க நாணயமும், மூன்றாவது 60 பேருக்கு தலா கால் பவுன் தங்க நாணயமும், நான்காவது 225 பேருக்கு வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்படுகிறது. இது தவிர 660 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும் என்று சிவாஜி புரொடக்ஷன் தெரிவித்துள்ளது. இப்போட்டி பிப்ரவரி 15 முதல் மார்ச் 1ம் தேதி வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அசல் படம் மாபெரும் வெற்றி என அறிவிக்கப்பட்டு விளம்பரப்படுத்தி வரும் நிலையில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகத்தான் இந்த தங்கப்புதிர் போட்டி என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று யாரும் நினைத்து விடக்கூடாதாம். படம் பார்க்க வரும் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காகத்தான் இந்த போட்டி நடத்தப்படுகிறது என்கிறது அசல் டீம்!